ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் வாய்மொழி

நாம் பிறந்த பயனையடைய ஆண்டவனை வழிபட வேண்டும். ஆண்டவனை வணங்கும்போது இன்னல்கள் ஏற்படுகின்றன. அப்பொழுது மனந்தளராமல் சோதனை என்று தொடர்ந்து வழிபடுபவர் பேரின்பம் அடைவர். ரோஜா மலர் அழகானது. மணமுடையது. மிருதுவானது. அத்தகைய சிறந்த மலரை யாவரும் விரும்புவர். ஆனால் ரோஜாச் செடியில் முள் இருக்கிறது. இருந்தாலும் முள்ளை நீக்கி மலரை அடைவது போல், வாழ்க்கையில் ஏற்படும் பல இன்னல்களைப் பொறுமையுடன் பொறுத்துக் கொண்டு மனோதிடத்துடன் கடவுளை வழிபட வேண்டும்.
துன்பம் வரும்போது ஸ்வாமியைத் திட்டக்கூடாது. இன்பம் வரும் போது ஸ்வாமியை மறக்கக்கூடாது. ஒப்பற்ற பரம்பொருளைச் சார்ந்தவர்கள் அதை அடைவது உறுதி எல்லோரிடத்திலும் இன்பமாகப் பேச வேண்டும். எதைச் செய்தாலும் ஸ்வாமியை நினைத்துச் செய்ய வேண்டும். பக்தி என்பது ஸ்வாமியை இடைவிடாமல் நினைப்பது. இவ்விதம் காலம் கடந்தார்க்குக் காலன் இல்லை.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *